/உள்ளூர் செய்திகள்/தேனி/ சத்துணவு பணியாளர்களிடம் ஆதார் அடையாள அட்டை கேட்டு நச்சரிப்பு பெண் பணியாளர்கள் அவதி சத்துணவு பணியாளர்களிடம் ஆதார் அடையாள அட்டை கேட்டு நச்சரிப்பு பெண் பணியாளர்கள் அவதி
சத்துணவு பணியாளர்களிடம் ஆதார் அடையாள அட்டை கேட்டு நச்சரிப்பு பெண் பணியாளர்கள் அவதி
சத்துணவு பணியாளர்களிடம் ஆதார் அடையாள அட்டை கேட்டு நச்சரிப்பு பெண் பணியாளர்கள் அவதி
சத்துணவு பணியாளர்களிடம் ஆதார் அடையாள அட்டை கேட்டு நச்சரிப்பு பெண் பணியாளர்கள் அவதி
ADDED : ஜூன் 28, 2024 01:17 AM
தேனி : சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஒருங்கிணைப்பாளர்களிடம் அலைபேசி மூலம் ஆதார், அடையாள அட்டை அனுப்ப கோரி கும்பல் நச்சரித்து வருவது பணியாளர்கள் புகார் கூறுகின்றனர்.
அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மதியம் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் இத் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளர்கள், சமையலர், உதவியாளர் பணிபுரிகின்றனர். இதில் ஒருங்கிணைப்பாளர்களுக்கு சில நாட்களாக அலைபேசியில் வாட்ஸ் அப் செயலி மூலம் அழைப்பு வருகிறது. அரசு முத்திரையுடன் கூடிய வாட்ஸ் அப் அழைப்பில் முகம் தெரியாமல் பேசும் நபர், உணவு தயாரிப்பு கூடம், பள்ளி வளாகம் ஆகியவற்றை வீடியோ காலில் காண்பிக்க கூறுகிறார். தொடர்ந்து சில கேள்விகள் கேட்டு பதில் பெற்று அழைப்பு துண்டிக்கப்படுகிறது.
பின்னர் பணி நேரத்திற்கு பிறகு வேறு எண்களில் இருந்து பெண் பணியாளர்களை தொடர்பு கொண்டு ஆதார் அட்டை, பணியாளர் அடையாள அட்டையை வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்ப வலியுறுத்து கின்றனர். இதனால் பணியாளர் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். தொடர்ந்து அழைப்புகள் வருவதால் பெண் பணியாளர்கள் அவதியடைகின்றனர்.
சத்துணவு திட்ட அதிகாரிகள் கூறுகையில், சத்துணவு ஒருங்கிணைப்பாளர்களிடம் வாட்ஸ் அப் செயலி மூலம் தலைமை செயலக அதிகாரிகள், மாவட்ட அளவிலான அதிகாரிகள் தொடர்பு கொள்கின்றனர்.
உணவு தயாரிக்கும் இடம், பணிபுரியும் உதவியாளர்கள் உள்ளிட்ட விபரங்களை காண்பிக்க கூறி ஆய்வு செய்கின்றனர். ஆனால் ஒரு போதும் அடையாள அட்டைகளை அனுப்ப கூறுவது இல்லை. யாரேனும் ஆதார், அடையாள அட்டை அனுப்ப கோரினால், வழங்க வேண்டாம் என்றனர்.