/உள்ளூர் செய்திகள்/தேனி/ மகசூல் பாதித்த மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் வலியுறுத்தல் மகசூல் பாதித்த மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
மகசூல் பாதித்த மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
மகசூல் பாதித்த மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
மகசூல் பாதித்த மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 22, 2024 05:54 AM

பெரியகுளம்; தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மகசூல் பாதித்த மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தினர்.
பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ், கலெக்டர் நேர்முக உதவியாளர் வளர்மதி, கல்லூரி முதல்வர் ராஜாங்கம், தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரபா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
பாண்டியன், விவசாயிகள் சங்க தலைவர்,பெரியகுளம்: மாவட்டத்தில் மஞ்சளாறு முதல் போடி முந்தல் வரை 27 ஆயிரம் ஏக்கரில் மா விவசாயம் செய்யப்படுகிறது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக மா விவசாயம் பாதித்துள்ளது. இதனால் விவசாயிகள் கடன்சுமையால் அவதிப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலையம், வைகை அணை பூச்சியியல் துறை விஞ்ஞானிகள், மா மரங்களுக்கு எப்போது எந்த அளவு மருந்து தெளிப்பது குறித்த செயல்திட்டம் விளக்கம் அளித்து மா விவசாயத்தை காப்பாற்ற வேண்டும். தற்போது விவசாயிகள் பூச்சி மருந்து கடையினர் கூறும் மருந்தை தெளித்து நஷ்டப்பட்டுள்ளனர்.
கலெக்டர்: மா விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். விவசாயிகளுக்கு, விஞ்ஞானிகளுடன் செயல்திட்ட பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
கண்மாய்க்குள் காற்றாலை
அங்குச்சாமி, மாவட்ட செயலாளர், நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு குழு: ஆண்டிபட்டி தாலுகா கடமலை- மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டமனூரில் 30 ஏக்கரிலான புதுக்குளம் கண்மாயை ஆக்கிரமித்து, தனியார் காற்றாலை நிறுவனத்தினர் 3 உயர்மின் கோபுரங்கள் அமைத்துள்ளனர். கண்மாய்க்குள் ரோடு வசதி ஏற்படுத்தி உள்ளனர். இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயமும், விவசாயின் வாழ்வாதாரம் பாழ்படுகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீரகேசவன்: தென்கரை விவசாயிகள் சங்க தலைவர், பெரியகுளம்: சோத்துப்பாறை அணையில் இருந்து பாலசுப்பிரமணியர் கோயில் வரை 7 கி.மீ.,துாரத்திற்கு குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இவைகள் மாங்காய், தென்னக்குருத்து, வாழைகளை கடித்து சேதப்படுத்துகிறது. விவசாயம் பாதிக்கப்படுகிறது. குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்.
சர்க்கரை ஆலை திறக்க வேண்டும்
பாண்டியன், தலைவர் விவசாயி: வைகை அணை பகுதியில் இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளிடம் பாதி கரும்புகளை அறுவடை செய்த நிலையில் ஆலையை மூடி விட்டனர். பாதி கரும்புகள் அறுவடை செய்யப்படாமல் உள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுகின்றனர்.
நேர்முக உதவியாளர் வளர்மதி: சர்க்கரை ஆலை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கணேசன், கண்டமனூர்: மயிலாடும்பாறை பகுதியில் இயங்கும் டவுன் பஸ் மேற்கூரை, பக்கவாட்டு பகுதிசேதமடைந்து மழை காலங்களில் பயணிகள் நனைந்தபடி பயணிக்கும் நிலை உள்ளது. எனவே புதிய பஸ் இயக்க வேண்டும் என்றார்.-