/உள்ளூர் செய்திகள்/தேனி/ கோயில் திருவிழா ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்த செயல் அலுவலர் கோயில் திருவிழா ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்த செயல் அலுவலர்
கோயில் திருவிழா ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்த செயல் அலுவலர்
கோயில் திருவிழா ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்த செயல் அலுவலர்
கோயில் திருவிழா ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்த செயல் அலுவலர்
ADDED : ஜூலை 08, 2024 12:00 AM
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டத்தில் செயல் அலுவலர் சுந்தரி பங்கேற்காமல், புறக்கணித்ததால், கூட்டம் அவசரகதியாக நடந்ததாக பா.ஜ., கட்சியினர், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இக்கோயில் ஆனித் திருவிழா ஆலோசனைக் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. துணை தாசில்தார் சித்ரா தலைமை வகித்தார்.
தென்கரை இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன் முன்னிலை வகித்தார். அனைத்து சமுதாய தலைவர்கள் பங்கேற்றனர்.
இன்று முதல் ஜூலை 17 வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. 9ம் நாள் திருவிழா ஜூலை 16ல் மாவிளக்கு, முளைப்பாரி விழாவில் மாலை 4:00 மணி முதல் 6:00 மணிக்குள் கோட்டை தெரு, மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 வரை முத்துராஜா தெரு, இரவு 8:00 மணி முதல் 10:00 மணிக்குள் பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்த பொது மக்கள் என அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நேர்த்தி கடன்களை நிறைவேற்ற வேண்டும்.
10ம் நாள் திருவிழா ஜூலை 17ல் அக்னிசட்டி மதியம் 3:00 மணி முதல் மாலை 5:00 வரை கோட்டை தெரு, மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி முத்துராஜா தெருவைச் சேர்ந்த பொது மக்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற வேண்டும். தெருக்களில் ஆர்ச் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.
பட்டாசு, சிலம்பாட்டம், கம்பாட்டம் போன்ற வீர விளையாட்டுகள் இடம் பெறக்கூடாது. தவறும் பட்சத்தில் போலீசாரால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கியத்துவமான இந்தக் கூட்டத்தில் கோயில் செயல் அலுவலர் சுந்தரி, டி.எஸ்.பி., சூரக்குமாரன், தீயணைப்பு துறை, மின் துறை அலுவலர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.