/உள்ளூர் செய்திகள்/தேனி/ பூச்சி மருந்து தெளிப்பவர்களுக்கு பயிற்சி வழங்க வலியுறுத்தல் பூச்சி மருந்து தெளிப்பவர்களுக்கு பயிற்சி வழங்க வலியுறுத்தல்
பூச்சி மருந்து தெளிப்பவர்களுக்கு பயிற்சி வழங்க வலியுறுத்தல்
பூச்சி மருந்து தெளிப்பவர்களுக்கு பயிற்சி வழங்க வலியுறுத்தல்
பூச்சி மருந்து தெளிப்பவர்களுக்கு பயிற்சி வழங்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 06, 2024 04:10 AM
கம்பம் : பூச்சி மருந்து தெளிக்கும் தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சியினை வட்டாரம் வாரியாக வேளாண் துறை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனி வேளாண், தோட்டக் கலை மாவட்டமாகும். பயிர்களுக்கு உரமிடுதல்,பூச்சி மருந்து தெளித்தல் பணி இங்கு அதிகம் நடைபெறும். இப் பணியில் முறையான வழிமுறைகளை பின்பற்றாமல் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் போது பலர் மூச்சு திணறி பலியாகின்றனர்.
சில மாதங்களுக்கு முன் சின்னமனூரில் பூச்சி மருந்து தெளிப்பவர்களுக்கு பயிற்சி நடத்தப்பட்டது. அதில் எந்த நேரத்தில் மருந்து தெளிக்க வேண்டும், தெளிப்பதற்கு முன்பு பின்பற்றப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், தெளித்த பின் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து விளக்கப்பட்டது.
அதிகமாக பயன்படுத்தும் பூச்சி மருந்துகளில் எது உயிரை பறிக்க கூடியது, பூச்சி மருந்து தெளிக்கும் போது சுவாசிக்காமல் இருக்க என்ன செய்யலாம், அல்லது தவிர்ப்பது எப்படி என்பன உள்ளிட்ட நவீன உத்திகளை விளக்க வேண்டும்.
மேலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் மாதம் ஒரு முறை இது பற்றி விழிப்புணர்வு பிரசாரங்களை வேளாண் துறை முன்னெடுக்க வேண்டும். பூச்சி மருந்து தெளிப்பவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வேளாண் துறை மானிய விலையில் தர வேண்டும்.
பயிற்சி முகாம் நடந்து முடிந்த இரண்டு மாதங்களுக்குள் கடந்த சில நாட்களுக்கு முன் சின்னமனூர் அருகே உள்ள கன்னியம்பட்டியை சேர்ந்த செல்வக்குமார் 42. தனது தோட்டத்தில பூச்சிமருந்து தெளித்ததால், மூச்சு திணறல் ஏற்பட்டு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். வேளாண்துறை அனைத்து வட்டாரங்களிலும் இதற்கென விரிவான பயிற்சி முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.