/உள்ளூர் செய்திகள்/தேனி/ சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு எட்டு ஆண்டு சிறை சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு எட்டு ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு எட்டு ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு எட்டு ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு எட்டு ஆண்டு சிறை
ADDED : ஜூலை 27, 2024 05:42 AM
மூணாறு : இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை அருகே சேனாபதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு எட்டு ஆண்டுகள் சிறை, ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்பகுதியில் தாத்தா, பாட்டி வீட்டில் வசித்த 15 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த அனீஷ் 42, கடந்த 2022ல் பாலியல் தொல்லை அளித்தார். சிறுமி பெற்றோரிடம் கூறினார். சாந்தாம்பாறை போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். அப்போதைய எஸ்.ஐ., சித்திக், அனீஷை கைது செய்தார்.
இந்த வழக்கு தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான்சன், அனீஷ்க்கு எட்டு ஆண்டுகள் சிறையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபாராத தொகையை சிறுமிக்கு வழங்கவும், அத்தொகையை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்குமாறும் தீர்ப்பில் கூறியுள்ளார். அரசு சார்பில் சிறப்பு வக்கீல் ஸ்மிசூ கே. தாஸ் ஆஜரானார்.