மாவட்ட கூடைப்பந்து போட்டி துவக்கம்
மாவட்ட கூடைப்பந்து போட்டி துவக்கம்
மாவட்ட கூடைப்பந்து போட்டி துவக்கம்
ADDED : ஜூன் 01, 2024 05:23 AM

பெரியகுளம்: பெரியகுளத்தில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் பெரியகுளம் அணிகள் வெற்றி பெற்றன.
பெரியகுளம் சோத்துப்பாறை ரோடு பாப் அகடாமி மைதானத்தில் தேனி மாவட்ட அளவிலான கூடப்பந்து போட்டி துவங்கியது. மே 31 முதல் ஜூன் 2 வரை 3 நாட்கள் நடக்கிறது. இதில் பெரியகுளம், தேனி, போடி, கூடலூர், ஆண்டிபட்டி, கம்பம் உள்ளிட்ட பகுதியிலிருந்து 18 கூடைப்பந்து கழக அணிகள் மோதுகின்றனர். நேற்றைய போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், ஆண்டிபட்டி மேஜிக் ஸ்டெப் கூடைப்பந்து அணியும் மோதியது. இதில் பெரியகுளம் அணி 67க்கு 40 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. பெரியகுளம் ஜேம்ஸ் நைஸ்மித் கூடைப்பந்து அணியும், தேனி டவுன் கூடைப்பந்து அணியும் மோதியது. இதில் பெரியகுளம் அணி 55:38 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. நாளை நிறைவு நாள் போட்டி நடக்கிறது. ஏற்பாடுகளை பாப் ஸ்போர்ட்ஸ், கேப்பிட்டல் ஸ்போர்ட்ஸ் கூடைப்பந்து கிளப் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
--