/உள்ளூர் செய்திகள்/தேனி/ கோர்ட் அருகே தகராறு : மூவர் மீது வழக்கு கோர்ட் அருகே தகராறு : மூவர் மீது வழக்கு
கோர்ட் அருகே தகராறு : மூவர் மீது வழக்கு
கோர்ட் அருகே தகராறு : மூவர் மீது வழக்கு
கோர்ட் அருகே தகராறு : மூவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 28, 2024 01:18 AM
போடி : கோம்பை சுல்லக்கரை தெருவில் வசிப்பவர் மகேஸ்வரி 31. இவரது கணவர் வேல்மணி 32. கோம்பை காந்தி நகரில் வசித்து வருகிறார்.
இருவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், ஒரே மாதத்தில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். போடி உரிமையியல் நீதிமன்றத்தில் வேல்மணி தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்காக மகேஸ்வரி கோர்டிற்கு வந்துள்ளார். வரும் வழியில் மகேஸ்வரியை, வேல்மணி திட்டி, அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். தூண்டுதலாக அவர் தாயார் சரோஜா இருந்ததாக மகேஸ்வரி போலீசில் புகார் செய்துள்ளார்.வேல்மணி கோர்ட்டிற்கு விசாரணைக்கு வரும் போது வேல்மணியை, மகேஸ்வரி தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக வேல்மணி புகார் செய்துள்ளார். இரு புகார்களில் வேல்மணி, சரோஜா மற்றும் மகேஸ்வரி மீது போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.