/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாமனார் வீட்டில் தகராறு கணவர் மீது மனைவி புகார் மாமனார் வீட்டில் தகராறு கணவர் மீது மனைவி புகார்
மாமனார் வீட்டில் தகராறு கணவர் மீது மனைவி புகார்
மாமனார் வீட்டில் தகராறு கணவர் மீது மனைவி புகார்
மாமனார் வீட்டில் தகராறு கணவர் மீது மனைவி புகார்
ADDED : ஜூன் 16, 2024 05:29 AM
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி ஜெ.ஜெ., நகரைச்சேர்ந்தவர் ஆசிபா ஜெய்ஸ்ரீ 29, பல் மருத்துவம் படித்த இவர் ஆண்டிபட்டியில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். இவரது கணவர் கிஷேர்குமார். இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. கருத்து வேறுபாட்டால் மூன்று ஆண்டுகளாக ஆசிபா ஜெய் ஸ்ரீ தனது தாயார் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கணவன்,மனைவி இருவரும் சேர்ந்து ஆண்டிபட்டியில் தனியாக வீடு வாங்கியதை விற்க வேண்டும் என்று மனைவியை கணவர் வலியுறுத்தி வந்தார்.
அடிக்கடி இவர்களுக்குள் பிரச்னையும் ஏற்பட்டது. மூன்று நாட்களுக்கு முன் ஆசிபா ஜெய்ஸ்ரீ வசிக்கும் அவரது தாயார் வீட்டில் அத்துமீறி நுழைந்த கிஷேர் குமார், வீட்டில் ஜன்னல், கார் கண்ணாடிகளை உடைத்து தகராறு செய்து மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.
இதுகுறித்து மனைவி புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.