/உள்ளூர் செய்திகள்/தேனி/ மதுவிலக்கு அமல்படுத்தகோரி ஆர்ப்பாட்டம் மதுவிலக்கு அமல்படுத்தகோரி ஆர்ப்பாட்டம்
மதுவிலக்கு அமல்படுத்தகோரி ஆர்ப்பாட்டம்
மதுவிலக்கு அமல்படுத்தகோரி ஆர்ப்பாட்டம்
மதுவிலக்கு அமல்படுத்தகோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 03, 2024 05:38 AM
தேனி : தேனி பங்களாமேட்டில், தேனி வடக்கு, தெற்கு மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் சார்பில், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் அப்துல்லாஹ் பத்ரி தலைமை வகித்தார்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக தெற்கு மாவட்டச் செயலாளர் சிந்தாமதார், மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் காதர்மைதீன் கோரிக்கை குறித்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்டச் செயலாளர் அண்ணாமலை, இந்திய கம்யூ., கட்சி மாவட்டச் செயலாளர் பெருமாள், வி.சி.க., மண்டலச் செயலாளர் தமிழ்வாணன், வெல்பேர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமதுஷபி, புதுப்பள்ளிவாசல் தலைவர் சர்புதீன் ஆகியோர் பேசினர். மனித நேய மக்கள் கட்சி வடக்கு மாவட்டச் செயலாளர் அபீப்ரஹ்மான் நன்றி தெரிவித்தார்.