ADDED : ஜூலை 22, 2024 07:25 AM

தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நாம்தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.
மகளிரணி மாநில ஒருங்கிணைப்பாளர் தேவி, மண்டல செயலாளர் பிரேம்சந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.