ADDED : ஜூலை 12, 2024 04:58 AM
கம்பம்: கம்பம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பேறுகால சிறப்பு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பிற்கென ரூ.10 கோடியில் புதிய கட்டடம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலாப் விழுந்து ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கம்பம் அரசு மருத்துவமனை முன்பு தொகுதி செயலாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில், மாவட்ட தலைவர் சுரேஷ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.