/உள்ளூர் செய்திகள்/தேனி/ சென்டர் மீடியனில் குப்பையை கிளறும் பசுக்களால் அபாயம் சென்டர் மீடியனில் குப்பையை கிளறும் பசுக்களால் அபாயம்
சென்டர் மீடியனில் குப்பையை கிளறும் பசுக்களால் அபாயம்
சென்டர் மீடியனில் குப்பையை கிளறும் பசுக்களால் அபாயம்
சென்டர் மீடியனில் குப்பையை கிளறும் பசுக்களால் அபாயம்
ADDED : ஜூலை 25, 2024 05:09 AM

கூடலுார்: கூடலுார் நகர்ப் பகுதியில் உள்ள 4 கி.மீ., தூர ரோடு, மாநில நெடுஞ்சாலைத்துறையினரால் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டுள்ளது.
தெற்கு மந்தை வாய்க்காலில் இருந்து வடக்கு போலீஸ் ஸ்டேஷன் வரை சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக காய்கறி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.
மேலும் மின்வாரியத்தினரால் அகற்றப்பட்ட மின்கம்பங்கள் பல விபத்தை ஏற்படுத்தும் வகையில் சென்டர் மீடியனில் வைக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் பசு மாடுகள் அங்குள்ள குப்பையை கிளறி காய்கறி கழிவுகளை உணவாக உட்கொண்டு வருகிறது. நீண்ட நேரம் நெடுஞ்சாலையில் நிற்பதால் டூ வீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
மேலும் வாகன போக்குவரத்து அதிகரிப்பால் நெரிசலும் தொடர்ந்து ஏற்பட்ட வண்ணம் உள்ளது. மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் சென்டர் மீடியனில் குப்பையை கொட்ட தடை விதிப்பதுடன் பசுமாடுகள் நெடுஞ்சாலையில் உலா வருவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும்.