/உள்ளூர் செய்திகள்/தேனி/ குமுளி மலைப்பாதையில் சேதமடைந்த தடுப்புச் சுவர் குமுளி மலைப்பாதையில் சேதமடைந்த தடுப்புச் சுவர்
குமுளி மலைப்பாதையில் சேதமடைந்த தடுப்புச் சுவர்
குமுளி மலைப்பாதையில் சேதமடைந்த தடுப்புச் சுவர்
குமுளி மலைப்பாதையில் சேதமடைந்த தடுப்புச் சுவர்
ADDED : ஜூன் 16, 2024 05:32 AM

கூடலுார்: தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது குமுளி மலைப்பாதை. லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர ரோடு பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும்.
வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
கொண்டை ஊசி வளைவு, இரைச்சல் பாலம் வளைவு, மாதா கோயில் வளைவு ஆகிய இடங்கள் மிக ஆபத்தான இடங்கள் ஆகும்.
விபத்துக்கள் நடக்காமல் தவிர்க்க இப்பகுதியில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த தடுப்புச் சுவர்களை முழுமையாக அகற்றி அப்பகுதியில் நிரந்தரமாக தடுப்புக் கம்பிகளை அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.