/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனி டாஸ்மாக் கடையை அகற்ற கவுன்சிலர் மனு தேனி டாஸ்மாக் கடையை அகற்ற கவுன்சிலர் மனு
தேனி டாஸ்மாக் கடையை அகற்ற கவுன்சிலர் மனு
தேனி டாஸ்மாக் கடையை அகற்ற கவுன்சிலர் மனு
தேனி டாஸ்மாக் கடையை அகற்ற கவுன்சிலர் மனு
ADDED : ஜூலை 05, 2024 05:26 AM
தேனி: தேனி கர்னல்ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள், மனமகிழ் மன்றங்களை அகற்ற நகராட்சி 5வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கிருஷ்ணபிரபா எஸ்.பி., கலெக்டரிடம் மனு அளித்தார்.
இவர் தேனி எஸ்.பி.,சிவபிரசாத்திடம் வழங்கிய மனுவில், தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் சிவாஜி நகர் இறககத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அதிகரித்துள்ளன.
இதனால் காலை, இரவில் பொது மக்கள் அவ்வழியாக செல்ல முடியவில்லை. இடையூாக உள்ள டாஸ்மாக் கடைகள், மனமகிழ் மன்றங்ளை அகற்ற வேண்டும் என கோரியுள்ளார். கலெக்டர் ஷஜீவனாவிடமும் கவுன்சிலர் மனு அளித்தார்.