ADDED : ஜூன் 09, 2024 03:53 AM
தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவிடம் நகராட்சி 5வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா வழங்கிய மனுவில், '5வது வார்டிற்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் சரிவர வினியோகிப்பதில்லை.
நகராட்சிக்கான வீரப்ப அய்யனார் கோயில், பழனிசெட்டிபட்டி குடிநீர் திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
மேலும் வைகை அணை, என்.ஆர்.டி., நகரில் உள்ள பம்பிங் செய்யும் இடங்களில் தேவையான ஜெனரேட்டர் வசதி செய்து குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும் என்றிருந்தது.