Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ திட்டச்சாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர சிறப்பு திட்ட நிதி ஒதுக்க கலெக்டர் மறுப்பு திட்டச்சாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர நிதி ஒதுக்க கலெக்டர் மறுப்பு தேனி நகராட்சி கூட்டத்தில் துணைத்தலைவர் புகார்

திட்டச்சாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர சிறப்பு திட்ட நிதி ஒதுக்க கலெக்டர் மறுப்பு திட்டச்சாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர நிதி ஒதுக்க கலெக்டர் மறுப்பு தேனி நகராட்சி கூட்டத்தில் துணைத்தலைவர் புகார்

திட்டச்சாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர சிறப்பு திட்ட நிதி ஒதுக்க கலெக்டர் மறுப்பு திட்டச்சாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர நிதி ஒதுக்க கலெக்டர் மறுப்பு தேனி நகராட்சி கூட்டத்தில் துணைத்தலைவர் புகார்

திட்டச்சாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர சிறப்பு திட்ட நிதி ஒதுக்க கலெக்டர் மறுப்பு திட்டச்சாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர நிதி ஒதுக்க கலெக்டர் மறுப்பு தேனி நகராட்சி கூட்டத்தில் துணைத்தலைவர் புகார்

ADDED : ஜூலை 30, 2024 06:05 AM


Google News
தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி திட்டசாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர சிறப்பு திட்டங்களில் நிதி ஒதுக்க முடியாது. மேம்பாலங்கள் அமைத்து பயணிப்போம் என கலெக்டர் கூறியதாக கவுன்சில் கூட்டத்தில் துணைத்தலைவர் செல்வம் தெரிவித்தார்.

தேனி நகராட்சிகூட்டம் தலைவர் ரேணுப்பிரியா(தி.மு.க.,) தலைமையில் நடந்தது. நகர்நல அலுவுலர் கவிபிரியா, நகரமைப்பு அலுவலர் நாசர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

மணிகண்டன் (தி.மு.க.,): நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் போதிய உபகரணங்கள், பாதுகாப்பு கவசங்கள் இன்றி பணிபுரிகின்றனர். தனியார் நிறுவனம் சார்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில்லை.

நாகராஜ் (காங்.,): துாய்மை பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

நகர்நல அலுவலர்: தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் சேகரிக்கும் குப்பையின் எடை அடிப்படையில் பணம் கொடுக்கப்படுகிறது. அதில் தமிழகம் முழுவதும் தற்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தனியார் மூலம் செயல்படுத்தாமல், அவர்களிடம் இருந்து பணியாளர்களை மட்டும் வாங்கி நகராட்சி நிர்வாகமே பணி மேற்கொள்ள உள்ளது. தனியார் நிறுவனங்கள் 2024 செப்., வரை மட்டும் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணபிரபா (அ.தி.மு.க.,): நகர்பகுதியில் திட்டசாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

பாலமுருகன்(தி.மு.க.,): நகராட்சியில் சேகராமாகும் குப்பை தப்புக்குண்டு அருகே குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. அங்கு சட்ட கல்லுாரி அமைந்துள்ளதால் குப்பை கொட்டுவதில் பிரச்னை உள்ளது. சட்டகல்லுாரிக்கு அனுமதி கொடுத்தவர்கள் மீது நகராட்சி சார்பில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்.

செல்வம் (துணைத்தலைவர்): நகரில் 5 திட்டசாலைகள் அமைக்க முன்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது திட்டசாலைகள் அமைக்க அதிக நிதி செலவாகும். நகராட்சியில் அவ்வளவு நிதி இல்லை. திட்டசாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர சிறப்பு திட்டங்கள் மூலம் நிதி ஏற்படுத்தி தருமாறு கலெக்டர் ஷஜீவனா விடம் தலைவர், அதிகாரிகளுடன் சந்தித்தோம். அவர் நிதி ஒதுக்க முடியாது. மேம்பாலம் அமைத்து பயன்படுத்துவோம் என்றார்.

காமாட்சியம்மாள்: நகராட்சி பகுதியில் அமைந்துள்ள மின்மயானம் அல்லிநகரம் கிராம கமிட்டி ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனை நகராட்சி மூலம் செயல்படுத்த வேண்டும்.

தலைவர்: பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும்.

சீமை கருவேல மரங்கள் அகற்ற ரூ.10 லட்சம்


நகராட்சி பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற ரூ.10 லட்சம் ஒதுக்க கோரிய தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

கிருஷ்ண பிரபா: நகராட்சியில் சீமை கருவேல மரங்கள் அதிகம் இல்லை. இதனை அகற்ற ரூ.10 லட்சம் செலவு செய்ய தேவையில்லை.

இக் கருத்தை பல கவுன்சிலர்கள் வரவேற்றனர். கூட்டத்தில் 86 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மூன்று தீர்மானங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us