/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாவட்டத்தில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம் மாவட்டத்தில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம்
மாவட்டத்தில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம்
மாவட்டத்தில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம்
மாவட்டத்தில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம்

70 பள்ளிகளில் யோகா தின விழா
தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் ராதாகிருஷ்ணன், நேரு யுவகேந்திரா மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் நேருராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெங்கடாசலபுரம் வி.வி., மேல்நிலைப் பள்ளிகளின் அமைப்புகளை சார்ந்த 500 மாணவிகள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு தேனி அறிவுத் திருக்கோயில் சார்பில் யோகா பயிற்சி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பொறுப்பு தலைமை ஆசிரியை வளர்மதி, வெங்கடாசலபுரம் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சரவணன் செய்திருந்தனர். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் நேருராஜன் கூறுகையில், உலக யோகா தினத்தை முன்னிட்டு 70 என்.எஸ்.எஸ்., பள்ளிகளை சேர்ந்த 3000 மாணவ, மாணவிகள் தத்து கிராமங்களில் ஊராட்சித் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் யோகா விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்றனர் என தெரிவித்தார்.