/உள்ளூர் செய்திகள்/தேனி/ சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான மாவட்ட கூடைப்பந்து போட்டி சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான மாவட்ட கூடைப்பந்து போட்டி
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான மாவட்ட கூடைப்பந்து போட்டி
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான மாவட்ட கூடைப்பந்து போட்டி
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான மாவட்ட கூடைப்பந்து போட்டி
ADDED : ஜூலை 28, 2024 04:32 AM

தேனி, : கோடாங்கிபட்டி பூர்ண வித்யா பவன் சி.பி.எஸ்.இ., சீனியர் செகன்டரி பள்ளியில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கிடையேயான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது.
மதுரை சகோதயா சார்பில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி நடந்தது. தேனி மாவட்டத்தில் இருந்து 9 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் பூர்ண வித்யா பவன் சி.பி.எஸ்.இ., சீனியர் செகன்டரி பள்ளி மைதானத்தில் நடந்தது. போட்டிகள் 12,14,17,19 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில் நடந்தது. 12 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கம்பம் ஆர்.ஆர்., இன்டர்நேஷனல் பள்ளி, தேனி சாந்தி நிகேதன் பப்ளிக் பள்ளி, 14 வயது பிரிவில் தேனி சாந்திநிகேதன் பப்ளிக் பள்ளி, போடி பூர்ணவித்யா பவன்பள்ளி, 17 வயதிற்குட்பட்ட பிரிவில் தேனி டி.எம்.எச்.என்.யூ., சி.பி.எஸ்.இ., பள்ளி, தேவதானப்பட்டி கல்வி இன்டர்நேஷனல் பள்ளி, 19 வயதிற்குட்பட்ட பிரிவில் கம்பம் பேர்லேண்ட்ஸ் ஏ பவுண்டேஷன் பள்ளி, கம்பம் ஆர்.ஆர்., இன்டர்நேஷனல் பள்ளிகள் முதல் இரு இடங்களை வென்றன.பள்ளி நிர்வாக இயக்குனர் அரவிந்தன், செயலாளர் கிருத்திகா துவக்கி வைத்தனர். போட்டிகள் ஜெய் டெக் இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் சாந்திரோஜா மேற்பார்வையில் நடந்தது. பள்ளி நிர்வாக இயக்குனர் ஹர்ஷவர்த்ன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
பள்ளி சீனியர் முதல்வர் சுபா ஈஸ்வரி, சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ஹேமா கண்ணகிராணி, மெட்ரிக் பள்ளி முதல்வர் சுரேஷ் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தனர். வெற்றி பெற்ற பள்ளிகள் மாநில போட்டிகளுக்கு தகுதி பெற்றன.