வரதட்சணை கொடுமை எஸ்.ஐ., மீது வழக்கு
வரதட்சணை கொடுமை எஸ்.ஐ., மீது வழக்கு
வரதட்சணை கொடுமை எஸ்.ஐ., மீது வழக்கு
ADDED : ஜூலை 04, 2024 02:37 AM
போடி:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீ வில்லிபுத்தூர், நத்தம்பட்டி அருகே கலைஞர் குடியிருப்பை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவரது கணவர் தேனி மாவட்டம், போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் யாழிசைச் செல்வன் 32. தேனியில் எஸ்.ஐ., ஆக பணியாற்றி வருகிறார்.
இருவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணையாக 43 பவுன் நகை, ரூ.4 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள், ரொக்கமாக ரூ.ஒரு லட்சமும், டூவீலரும் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் மேலும் வரதட்சனை கேட்டு கணவர், குடும்பத்தினர் கொடுமை படுத்தியதாக போடி அனைத்து மகளிர் போலீசில் பிரியதர்ஷினி புகார் செய்தார்.
எஸ்.ஐ., யாழிசைச் செல்வன் உட்பட 6 பேர் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.