/உள்ளூர் செய்திகள்/தேனி/ மருத்துவமனை கட்டட விபத்து கான்ட்ராக்டர் உட்பட 5 பேர் மீது வழக்கு மருத்துவமனை கட்டட விபத்து கான்ட்ராக்டர் உட்பட 5 பேர் மீது வழக்கு
மருத்துவமனை கட்டட விபத்து கான்ட்ராக்டர் உட்பட 5 பேர் மீது வழக்கு
மருத்துவமனை கட்டட விபத்து கான்ட்ராக்டர் உட்பட 5 பேர் மீது வழக்கு
மருத்துவமனை கட்டட விபத்து கான்ட்ராக்டர் உட்பட 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 10, 2024 05:02 AM
கம்பம், : கம்பம் அரசு மருத்துவமனை கட்டடம் கட்டுமான பணிகளின் போது சிலாப் இடிந்து விழுந்து தொழிலாளி நம்பிராஜன் 40, பலியானார்.
இருவர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மதுரை தெப்பக்குளத்தை சேர்த்த விபத்தில் காயமடைந்த சதீஷ் புகாரில் தேனியை சேர்ந்த கான்ட்ராக்டர் பாண்டியராஜன், பொறியாளர்கள் வெங்கடாச்சலம், நவீன், மணிவண்ணன், மேஸ்திரி செல்வம் ஆகியோர் மீது கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விபத்தை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் நேற்று காலை அரசு மருத்துவமனை முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்