காவலரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
காவலரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
காவலரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 20, 2024 12:24 AM
ஆண்டிபட்டி: வைகைபுதூரைச் சேர்ந்தவர் பாண்டி 42, வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் மீன் பிடிக்கும் குத்தகை எடுத்த தமிழரசனிடம் மீன்பிடிப்பு பகுதியில் காவலராக பணியாற்றி வருகிறார்.
நான்கு நாட்களுக்கு முன் இரவில் நீர் பிடிப்பு பகுதியான ஈஸ்வரன் கோயில் அருகே பாண்டி அவருடன் சென்ற அன்னக்கொடி இருவரும் காவல் பணியில் இருந்துள்ளனர். அப்பகுதியில் நின்றிருந்தவர்களிடம் இரவில் ஏன் இங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அப்போது கரட்டுப்பட்டியை சேர்ந்த பூவிலம், அர்ச்சுனன், ஜெயசீலன், அருண்குமார் ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசி கற்களால் தாக்கியுள்ளனர்.
காயமடைந்த பாண்டி புகாரில் க.விலக்கு போலீசார் தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.