/உள்ளூர் செய்திகள்/தேனி/ பஸ் மேலாளரை தாக்கிய 14 பேர் மீது வழக்கு பஸ் மேலாளரை தாக்கிய 14 பேர் மீது வழக்கு
பஸ் மேலாளரை தாக்கிய 14 பேர் மீது வழக்கு
பஸ் மேலாளரை தாக்கிய 14 பேர் மீது வழக்கு
பஸ் மேலாளரை தாக்கிய 14 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 28, 2024 04:44 AM
தேனி, : உத்தமபாளையம் பஸ் ஸ்டாண்டில் ஜூலை 25ல் பஸ் கிளம்புவதில் இரு தனியார் பஸ் டிரைவர், கன்டக்டர்களுக்குள் ஏற்பட்ட தகராறு தேனி பஸ் ஸ்டாண்டிலும் பிரச்னை ஏற்பட்டது.
தேனி பஸ் ஸ்டாண்டில் இருந்து தனியார் பஸ்சை டிரைவர் ராஜபாண்டி இயக்கினார். உத்தமபாளையத்தில் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து மற்றொரு தனியார் பஸ்சை செல்லவிடாமல் மறித்து நிறுத்தினர். பஸ் நிறுவன மேலாளரான செண்பகராஜன் 34, பஸ்சை மறித்து நிறுத்திய ஊழியர்களிடம் இது குறித்து கேட்டார். அப்போது ராஜா, விருமாண்டி, மணிக்காளை, அருண்குமார், கருப்பசாமி, சரவணன், கிருபா, அழகர், விஜயன், அஸ்வின், அழகேசன், வினோத், சுரேஸ், ஹரி ஆகியோர் இணைந்து செண்பகராஜனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதை தடுக்க வந்த கடை ஊழியர் சாந்தியையும் தாக்கினர். பஸ் நிறுவன மேலாளர், கடை ஊழியர் சிகிச்சைக்காக அரசு மருத்துவ க்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். செண்பகராஜன் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.