மூன்று உரக்கடைகள் விற்பனைக்கு தடை
மூன்று உரக்கடைகள் விற்பனைக்கு தடை
மூன்று உரக்கடைகள் விற்பனைக்கு தடை
ADDED : ஜூன் 20, 2024 05:21 AM
தேனி: பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் நடந்தது.
வேளாண்துறை இணை இயக்குனர் பால்ராஜ் , வேளாண் அலுவலர் மதுமிதா உர விற்பனை கடைகளில் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் 3 கடைகளில் இருப்பு பதிவேடு முறையாக பராமரிக்காததும், உர விற்பனை முனைய கருவிக்கும் உண்மை மதிப்பிற்கும் இடையே வேறுபாடு கண்டறியப்பட்டது. அந்த கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் என மொத்தம் 46.25 டன் உரங்கள் விற்பனை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டது.விவசாயிகள் ஆதார் எண் பயன்படுத்தி, விற்பனை முனைய கருவி மூலம் மட்டும் உரங்கள் விற்பனை செய்ய வேண்டும்.
உரிமம் பெற்ற இடங்களில் மட்டும் உரங்கள் இருப்பு வைக்க வேண்டும் என உர விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.