ADDED : ஜூலை 24, 2024 05:51 AM
தேனி : தேனி என்.ஆர்.டி., நகர் காந்திஜி ரோடு தர்மராஜன் 54. இவர் நேற்று காலை 6:00 மணிக்கு வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத ஒருவர் டூவீலரில் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார்.
உடன் வந்த மற்ற இருவர் வீட்டின் காம்பவுண்ட் சுவற்றில் ஏறி குதித்து திருடும் நோக்கில் கதவை கடப்பாறையால் உடைத்துக் கொண்டிருந்தனர். தர்மராஜன் சத்தம் கேட்டு ஜன்னல் வழியாக பார்த்தபோது, மர்மநபர்கள் தப்பி ஓடினர். புகாரில் தேனி போலீசார் வருகின்றனர்.