/உள்ளூர் செய்திகள்/தேனி/ இரவு ரோந்துப் பணி போலீசார் பாதுகாப்பிற்கு ஆயுதம் அவசியம்: தேனி எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவு இரவு ரோந்துப் பணி போலீசார் பாதுகாப்பிற்கு ஆயுதம் அவசியம்: தேனி எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவு
இரவு ரோந்துப் பணி போலீசார் பாதுகாப்பிற்கு ஆயுதம் அவசியம்: தேனி எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவு
இரவு ரோந்துப் பணி போலீசார் பாதுகாப்பிற்கு ஆயுதம் அவசியம்: தேனி எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவு
இரவு ரோந்துப் பணி போலீசார் பாதுகாப்பிற்கு ஆயுதம் அவசியம்: தேனி எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவு
ADDED : ஜூலை 19, 2024 06:38 AM

தேனி : மாவட்டத்தில் ரோந்து செல்லும் போலீசார் கட்டாயமாக பாதுகாப்பு ஆயுதங்களை எடுத்துச் செல்வது அவசியம்.' என, எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்யப்ட்ட வழக்குகளில் குற்றப்பிண்ணணி உள்ளவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில் சிறையில் உள்ளவர்கள் தவிர்த்து, வெளியில் உள்ளவர்களையும், அவர்களிடம் தொடர்பில் உள்ளவர்கள், குடும்பத்தினர்களை தொடர்ச்சியாக போலீசார் கண்காணிக்கின்றனர்.
மாவட்ட குற்றப் பதிவேட்டுத்துறை (டி.சி.ஆர்.பி., ) மூலம் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களையும் போலீசார் தொடர்ந்து கண்காணிக்க சிவபிரசாத் எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக பதவி ஏற்ற டேவிட்சன் தேவாசீர்வாதம், ரோந்து பணிகளில் செல்லும் போலீசார் கட்டாயமாக பாதுகாப்பு ஆயுதங்களை வைத்திருப்பது அவசியம் என உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து தேனி மாவட்ட போலீஸ் விசாரணை அதிகாரிகள் ரோந்து நேரங்களில் 9 எம்.எம்., பிஸ்டல், ஏ.கே.47 துப்பாக்கிகளை, லத்தி உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்களையும் கட்டாயம் வைத்திருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.