/உள்ளூர் செய்திகள்/தேனி/ அரசு பள்ளிகளின் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா அரசு பள்ளிகளின் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா
அரசு பள்ளிகளின் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா
அரசு பள்ளிகளின் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா
அரசு பள்ளிகளின் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா
ADDED : ஜூலை 22, 2024 07:18 AM
ஆண்டிபட்டி: அரசு பள்ளிகளில் படித்து 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு தேனீ கலை இலக்கிய மையம் சார்பில் பரிசளிப்பு, பாராட்டு விழா நடந்தது.
மையத்தின் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் பாண்டியராஜன் குத்து விளக்கு ஏற்றினார். டி.சுப்புலாபுரம் தொழில் அதிபர் முத்துச்சாமி, ஆண்டிபட்டி ரோட்டரி சங்க தலைவர் பழனிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், ஒன்றியக் கவுன்சிலர் ராஜாராம் ஆகியோர் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கினர். தேனி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சக்கம்பட்டி மக்கள் பேரவை கல்வி வளர்ச்சி குழு பொறுப்பாளர் கரிகாலன், தேனீ கலை இலக்கிய மைய துணைச் செயலாளர் தங்கவேல் ஆகியோர் செய்திருந்தனர்.