/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரத்த தான கொடையாளர்களுக்கு மருத்துவமனையில் பாராட்டு விழா ரத்த தான கொடையாளர்களுக்கு மருத்துவமனையில் பாராட்டு விழா
ரத்த தான கொடையாளர்களுக்கு மருத்துவமனையில் பாராட்டு விழா
ரத்த தான கொடையாளர்களுக்கு மருத்துவமனையில் பாராட்டு விழா
ரத்த தான கொடையாளர்களுக்கு மருத்துவமனையில் பாராட்டு விழா
ADDED : ஜூலை 20, 2024 12:52 AM

பெரியகுளம் : பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ரத்ததான நன்கொடையாளர்களை பாராட்டி விருது வழங்கும் விழா நடந்தது. மருத்துவ இணை இயக்குனர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் குமார் முன்னிலை வகித்தார்.ரத்தவங்கி மருத்துவ அலுவலர் பாரதி வரவேற்றார். நிலைய அலுவலர் மகேஸ்வரி, டாக்டர்கள் அனுமந்தன், ராஜேஷ், மாவட்ட திட்ட மேலாளர் முகமது பாரூக் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர். இரு முகாம்களில் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி 148 யூனிட் ரத்தம் வழங்கி முதலிடம் பெற்றது. ஒருங்கிணைப்பாளர் முகமது சபீமிற்கு விருது வழங்கப்பட்டது. பெரியகுளம், நல்லகருப்பன்பட்டி மேரிமாதா கலை, அறிவியல் கல்லூரி 110 யூனிட் வழங்கி 2வது இடமும், குள்ளப்புரம் வேளாண் கல்லூரி 88 யூனிட் ரத்தம் வழங்கி 3மூன்றாம் இடம் பிடித்தது.
ரத்ததானம் வழங்கியவர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். ' 2023 ஜன., முதல் டிசம்பர் வரை 36 முகாம்கள் நடத்தி 2016 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு, 1950 நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. 67 யூனிட் ரத்தம் கையிருப்பு உள்ளது என்றார்.