ADDED : ஜூன் 29, 2024 04:36 AM
போடி : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கிய போடி அறிவுத் திருக்கோயில் மனவளக்கலை ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.
அறிவுத் திருக்கோயில் தலைவர் சிவராமன் தலைமை வகித்தார். செயலாளர் சங்கிலிகாளை, பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், மாலதி முன்னிலை வகித்தனர்.
பயிற்சி வழங்கிய போடி மூவேந்தர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுகுமாரி, சவுண்டீஸ்வரி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சதீஷ்குமார், கல்வி ஆலோசகர் ஹரிஹரன், ஸ்பைஸ் வேலி கல்வியியல் கல்லூரி முதல்வர் அபிராமி, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.