/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஏசி, பிரிட்ஜ் பழுதுபார்த்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் ஏசி, பிரிட்ஜ் பழுதுபார்த்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
ஏசி, பிரிட்ஜ் பழுதுபார்த்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
ஏசி, பிரிட்ஜ் பழுதுபார்த்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
ஏசி, பிரிட்ஜ் பழுதுபார்த்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 17, 2024 12:07 AM
தேனி : கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் ஏசி, பிரிட்ஜ் பழுது பார்த்தல் இலவச பயிற்சி ஜூலை 15 முதல் ஆக.20 வரை நடக்கிறது.
விருப்பமுள்ள கிராமப் புறங்களைச் சேர்ந்த 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும். பயிற்சி, மதிய உணவு இலவசம். விரும்புவோர் தங்களது புகைப்படம், ஆதார் நகல் உடன் தேனி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியில் தேர்ச்சி பெறுவோறுக்கு சான்றிதழ், தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 95003 14193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.