/உள்ளூர் செய்திகள்/தேனி/ சின்னமனுார் நகராட்சியில் அம்ரூத் திட்ட பராமரிப்புப் பணி தீவிரம் சின்னமனுார் நகராட்சியில் அம்ரூத் திட்ட பராமரிப்புப் பணி தீவிரம்
சின்னமனுார் நகராட்சியில் அம்ரூத் திட்ட பராமரிப்புப் பணி தீவிரம்
சின்னமனுார் நகராட்சியில் அம்ரூத் திட்ட பராமரிப்புப் பணி தீவிரம்
சின்னமனுார் நகராட்சியில் அம்ரூத் திட்ட பராமரிப்புப் பணி தீவிரம்
ADDED : ஜூலை 07, 2024 11:59 PM
சின்னமனுார்: சின்னமனுார் நகராட்சியில் ரூ.13 கோடி மதிப்பில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்க தோண்டியதால் விதிகள் குண்டும் குழியுமாக மாறியள்ள நிலையில் அதனை சீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன.
இந்நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர், தினமும் சப்ளை செய்ய அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.28 கோடி அனுமதிக்கப்பட்டது. குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டுதல், பகிர்மான குழாய் பதித்தல், இணைப்பு இல்லாத வீடுகளுக்கு இணைப்பு கொடுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் பகிர்மான குழாய் பதிக்க தோண்டியதில், நகரில் பெரும்பாலான வீதிகள் குண்டும் குழியுமாக மாறின.- வீதிகளை பராமரிக்க நகராட்சியில் நிதி இல்லை. இந்நிலையில் அரசு ரூ.13 கோடியை ஒதுக்கி அனுமதித்தது. கடந்தாண்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கியது. வ.உ.சி. நகர், கண்ணம்மா கார்டன், அண்ணாமலை நகர், அரசு மருத்துவமனை வீதி, ஊராட்சி ஒன்றிய சாலை உள்ளிட்ட பல வீதிகளில் தற்போது ரோடு அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் கோபிநாத் கூறுகையில், 'அம்ரூத் திட்டத்தின் கீழ் பகிர்மான குழாய் பதிக்க நகரின் அனைத்து வீதிகளும் தோண்டப்பட்டன. ரூ.13 கோடி மதிப்பீட்டில் நகரின் அனைத்து வீதிகளும் பராமரிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக அண்ணாமலை நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் தார் ஊற்றி ரோடு அமைக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய நகரில் 90 சதவீத வீதிகள் பராமரிப்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.', என்றார்.