/உள்ளூர் செய்திகள்/தேனி/ விவசாய தொழிலாளர்கள் மனு வழங்கும் போராட்டம் விவசாய தொழிலாளர்கள் மனு வழங்கும் போராட்டம்
விவசாய தொழிலாளர்கள் மனு வழங்கும் போராட்டம்
விவசாய தொழிலாளர்கள் மனு வழங்கும் போராட்டம்
விவசாய தொழிலாளர்கள் மனு வழங்கும் போராட்டம்
ADDED : ஜூலை 24, 2024 06:12 AM

பெரியகுளம் : வடுகபட்டி பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த கோரி விவசாய தொழிலாளர் சங்கம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படும் என்ற தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். தாலுகா தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்கம் தாலுகா செயலாளர் சுப்பிரமணி உட்பட ஏராளமானோர் வடுகபட்டி பஸ்ஸ்டாப்பிலிருந்து பேரூராட்சி அலுவலகம் சென்றனர். பேரூராட்சி தலைவர் நடேசனிடம் மனு கொடுத்தனர்.