ADDED : ஜூலை 03, 2024 05:41 AM
தேனி : ஆடிப்பட்டத்தில் காய்கறி, சிறுதானியம் சாகுபடி செய்ய, உரிமம் பெற்ற விற்பனையாளர்களிடம் விதைகள் வாங்க வேண்டும்.
விபரங்களை பார்த்து, ரசீது பெற வேண்டும். மண்ணில் ஈரப்பதம் உள்ளதை உறுதி செய்து விதைக்க வேண்டும். உணவு தானியம் விற்பனை கடைகளில் வாங்கி விதைக்க கூடாது. தரமற்ற விதை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை விதை ஆய்வு துணை இயக்குனர் வாசுகி தெரிவித்துள்ளார்.