/உள்ளூர் செய்திகள்/தேனி/ எரிசாராயம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது எரிசாராயம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
எரிசாராயம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
எரிசாராயம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
எரிசாராயம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
ADDED : ஜூன் 19, 2024 05:19 AM

மூணாறு, : எரிசாராயம் கடத்தல், விற்பனை வழக்குகளில் சிக்கி கோயம்புத்தூரில் தலைமறைவாக இருந்தவரை கலால்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான நயமக்காடு எஸ்டேட் வெஸ்ட் டிவிஷனைச் சேர்ந்தவர் பிரபாகரன் 49.
இவர் ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து எரிசாராயம் கடத்தி வந்து மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்தார்.
இது தொடர்பாக பிரபாகரன் மீது மூணாறு, தேவிகுளம், அடிமாலி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் 13க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தவிர பல்வேறு கிரிமினல் வழக்குகளும் உள்ளன. இவரை 2014ல் குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இவர் மீதான வழக்கு ஒன்றில் 2017ல் தொடுபுழா மாவட்ட நீதிமன்றம் அளித்த ஜாமீனில் வெளி வந்தவர் தலைமறைவானார்.
அதன் பிறகும் எஸ்டேட் பகுதிகளில் எரிசாராயம் விற்பனை நடத்தினார். அவரை, போலீசார், கலால்துறை அதிகாரிகள் ஆகியோர் தேடிய நிலையில் தலைமறைவானார். இந்நிலையில் தமிழகத்தில் கோயம்புத்தூர், சிங்காநல்லூரில் தனது வீட்டில் பதுங்கி இருந்தவரை கலால்துறை டெபுடி கமிஷனர் ஜெயசந்திரன் தலைமையிலான அதிகாரிகள் கைது செய்தனர்.