/உள்ளூர் செய்திகள்/தேனி/ தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை மையங்கள் தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை மையங்கள்
தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை மையங்கள்
தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை மையங்கள்
தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை மையங்கள்
ADDED : ஜூன் 21, 2024 04:46 AM
தேனி: பொது மக்களின் ஆதார் சேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் தபால் அலுவலங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.
பெரியகுளம், போடி தலைமை தபால் அலுவலகங்களில் ஆதார் பதிவு, திருத்த சேவை காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை (ஞாயிறு தவிர) செயல்படும்.
மேலும் தேனி, சுப்புராஜ் நகர், ஆண்டிபட்டி, கண்டமனுார், வீரபாண்டி, சின்னமனுார், உத்தமபாளையம், கோம்பை, தேவாரம், கூடலுார், ராயப்பன்பட்டி, கம்பம், தேவதானப்பட்டி, சில்லமரத்துப்பட்டி, கடமலைக்குண்டு, காமயக்கவுண்டன்பட்டி, சுப்புலாபுரம், சேடப்பட்டி, சாப்டூர், எழுமலை, உசிலம்பட்டி, லட்சுமிபுரம், பெரியகுளம் பஜார், வடுகபட்டி ஆகிய தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பொது மக்கள் மேற்கூறிய தபால் அலுவலகங்களை அணுகி ஆதாரில் பெயர், முகவரி, அலைபேசி எண் திருத்தம், புதிய ஆதார் பதிவு முதலிய சேவைகளை பெற்று பயன் பெறலாம். என தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.