/உள்ளூர் செய்திகள்/தேனி/ குடிகாரர்களின் கூடாரமாக மாறும் வாரச்சந்தை வளாகம் குடிகாரர்களின் கூடாரமாக மாறும் வாரச்சந்தை வளாகம்
குடிகாரர்களின் கூடாரமாக மாறும் வாரச்சந்தை வளாகம்
குடிகாரர்களின் கூடாரமாக மாறும் வாரச்சந்தை வளாகம்
குடிகாரர்களின் கூடாரமாக மாறும் வாரச்சந்தை வளாகம்
ADDED : ஜூலை 22, 2024 07:15 AM
சின்னமனுார்: 'சின்னமனுார் நகராட்சி வாரச்சந்தை வளாகம் திறந்த வெளி பாராக மாறி வருகிறது. இதனைத் தடுக்க நகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என, சமூக ஆர்வர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நகராட்சியின் அலுவலகத்தை ஒட்டியே பரந்து விரிந்த இடத்தில் வாரச்சந்தை செயல்படுகிறது. கட்டடம் நல்ல நிலையில் இருந்த போதும், கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து அதே வளாகத்தில் தகர செட் அமைத்து புதிய கடைகளை கட்டி வருகின்றனர்.
இதற்கிடையே வாரத்தில் ஒரு நாள் தவிர மற்ற நாட்கள் சந்தை வளாகம் திறந்தே இருக்கும். குடிகாரர்கள் திறந்த வெளி
பாராக மாற்றி விட்டனர். அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் சரக்கை வாங்கி வந்து, சந்தையில் அமர்ந்து குடிக்கின்றனர். அதுவும் அலுவலகத்திற்கு பின்புறம் இந்த கூத்து நடக்கிறது.
கமிஷனர் தினமும் அலுவலகம் வந்து செல்கிறார். ஊருக்குள் சென்று ஆய்வு நடத்தினால் தான் என்ன நடக்கிறது என தெரியும். ஆனால் அலுவலகத்தை விட்டு வெளியேறுவது இல்லை.
எனவே நகராட்சி அலுவலகம் அருகிலேயே வாரச்சந்தை வளாகத்தை திறந்த வெளி பாராக மாற்றி உள்ளனர். இனிமேலாவது கமிஷனர் திறந்து கிடக்கும் சந்தை வளாகத்தை, சந்தை நாள் தவிர, மற்ற நாட்கள் பூட்டி வைக்க முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.