/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
ADDED : ஜூன் 18, 2024 05:27 AM

தேனி : தேனி மாவட்டத்தில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு அனைத்து பள்ளிவாசல்களில் நடந்த சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். -
தேனி அல்லிநகரம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் மல்க்கர்ஒலி தலைமையில் நேற்று காலை பள்ளிவாசலில் இருந்து கம்பம் ரோடு பழைய பள்ளிவாசல் வரை ஊர்வலமாக சென்று சிறப்பு தொழுகை நடத்தினர்.
இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தேனி சுப்பன் தெரு புதுப்பள்ளிவாசலில் ஜமாத் தலைவர் சர்புதீன் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் தேனி நகரம், சுப்பன் தெரு இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
அன்னஞ்சி: அன்னஞ்சி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ரஷாக் தலைமையில் அன்னஞ்சி பள்ளி வாசலில் இருந்து அன்னஞ்சி நால்ரோடு சந்திப்பு வரை ஊர்வலமாக சென்று பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.
திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று, வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். தேனி ரத்னாநகர் அல்மதீனா பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகை ஜமாத் நிர்வாகி அஜ்மல்கான் தலைமையில் நடந்தது. திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
வீரபாண்டி: முத்துத்தேவன்பட்டி மஜிஜித் ஜமாத் பள்ளிவாசலில் தலைவர் ஜஹாருல்லா தலைமையில் பக்ரீத் தொழுகை நடந்தது. உப்புக்கோட்டை நிஜாமுதீன் பள்ளிவாசலில் ஜமாத் தலைவர் நிஜாம்அஹமது தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது.
திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
கம்பம்: தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையையொட்டி கம்பத்தில் உள்ள பல பள்ளிவாசல்களில் இருந்து வாவேர் பள்ளிவாசலில் கூடினார்கள். பின் அங்கிருந்து ஜமாத் தலைவர் ஜைனுலாப்தீன் தலைமையில் ஊர்வலமாக கிளம்பி ரேஞ்சர் ஆபிஸ் அருகில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். தலைமை இமாம் அலாவுதீன் மிஸ்பாகி தொழுகையை நடத்தினார். ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இதில் பங்கேற்றனர்.
உத்தமபாளையத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. ஜமாத் தலைவர் தர்வேஷ்முகைதீன் தலைமையில் இஸ்லாமியர்கள் திரளாக பங்கேற்றனர்.
சின்னமனூரில் நேற்று காலை பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பெரிய பள்ளிவாசலில் தலைமை இமாம் ஆதம் ரசாதி சிறப்பு தொழுகையை நடத்தினார்.
பெரியகுளம்: தென்கரை, தண்டுப்பாளையம், வடகரை, தேவதானப்பட்டி, குள்ளப்புரம், ஜெயமங்கலம் பள்ளிவாசல்கள் உட்பட தாலுகா பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. இஸ்லாமியர்கள் குர்பானி பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.