/உள்ளூர் செய்திகள்/தேனி/ கியர் மாற்ற முடியாததால் பாதி வழியில் நின்ற அரசு பஸ் கியர் மாற்ற முடியாததால் பாதி வழியில் நின்ற அரசு பஸ்
கியர் மாற்ற முடியாததால் பாதி வழியில் நின்ற அரசு பஸ்
கியர் மாற்ற முடியாததால் பாதி வழியில் நின்ற அரசு பஸ்
கியர் மாற்ற முடியாததால் பாதி வழியில் நின்ற அரசு பஸ்
ADDED : ஜூன் 06, 2024 04:16 AM

தேனி : தேனியில் இருந்து ஆண்டிப்பட்டி சென்ற பஸ்சில் கியர் மாற்ற இயலாததால் பாதிவழியில் நின்றது இதனால் பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
போடி டெப்போவிற்கு சொந்தமான (TN. 57. N. 1771) என்ற அரசு பஸ் காலை 11:20 மணியளவில் தேனி கர்னல் ஜான்பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு இயக்கப்பட்டது. பஸ் புறப்பட்டு கலெக்டர் அலுவலக ரோட்டில் சென்ற போது கியர் மாற்ற முடியாததால் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பஸ்சில் பயணித்த 30க்கும் மேற்பட்ட பயணிகள், அவ்வழியே வந்த வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து டெப்போ அதிகாரிகளிடம் கேட்ட போது, பஸ்சில் பழுது நீக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது.
பஸ்களில் குறை இருந்தால் அதனை தெரிவிக்கும் படி டிரைவர்களிடம் கூறுகிறோம். அதன்படி பஸ்சில் உள்ள பழுதுகளை நீக்குகின்றோம். இயக்க இயலாத பஸ்களை அப்புறப்படுத்தி வருகிறோம். புது பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. என்றனர். அரசு பஸ்களை சீரமைத்து இயக்க வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.