/உள்ளூர் செய்திகள்/தேனி/ உழவர் சந்தை அருகே வீட்டில் 6.5 பவுன் நகை கொள்ளை உழவர் சந்தை அருகே வீட்டில் 6.5 பவுன் நகை கொள்ளை
உழவர் சந்தை அருகே வீட்டில் 6.5 பவுன் நகை கொள்ளை
உழவர் சந்தை அருகே வீட்டில் 6.5 பவுன் நகை கொள்ளை
உழவர் சந்தை அருகே வீட்டில் 6.5 பவுன் நகை கொள்ளை
ADDED : ஜூலை 08, 2024 12:08 AM

தேனி: தேனி உழவர் சந்தை அருகே கோட்டைகளம் தெருவில் வீட்டின் கதவு, பீரோவை உடைத்து ரூ.1.95 லட்சம் மதிப்புள்ள 6.5 பவுன் நகைகள் கொள்ளை போனது தொடர்பாக தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி கோட்டைக்களம் தெரு முருகன். இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மனைவி சுபா. உடல்நிலை சரியில்லாததால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இவரது தம்பி ராஜசேகர் வீட்டின் அருகில் வசிக்கிறார். இந்நிலையில் சுபா வீட்டிற்கு, நேற்று காலை 6:00 மணிக்கு ராஜசேகரன் மனைவி சென்றார். அப்போது வீட்டு கதவு திறந்திருந்தது. வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்தது. நகைப்பெட்டி கட்டிலில் கிடந்தது. வீட்டில் இருந்த ரூ. 1.95 லட்சம் மதிப்புள்ள 6.5 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தன. ராஜசேகரன் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.