/உள்ளூர் செய்திகள்/தேனி/ வனப்பகுதியிலிருந்து 5 கி.மீ., கடந்து வரும் காட்டுப்பன்றிகளை கொல்ல அனுமதி மாவட்ட வன அலுவலரின் முன் அனுமதி அவசியம் வனப்பகுதியிலிருந்து 5 கி.மீ., கடந்து வரும் காட்டுப்பன்றிகளை கொல்ல அனுமதி மாவட்ட வன அலுவலரின் முன் அனுமதி அவசியம்
வனப்பகுதியிலிருந்து 5 கி.மீ., கடந்து வரும் காட்டுப்பன்றிகளை கொல்ல அனுமதி மாவட்ட வன அலுவலரின் முன் அனுமதி அவசியம்
வனப்பகுதியிலிருந்து 5 கி.மீ., கடந்து வரும் காட்டுப்பன்றிகளை கொல்ல அனுமதி மாவட்ட வன அலுவலரின் முன் அனுமதி அவசியம்
வனப்பகுதியிலிருந்து 5 கி.மீ., கடந்து வரும் காட்டுப்பன்றிகளை கொல்ல அனுமதி மாவட்ட வன அலுவலரின் முன் அனுமதி அவசியம்
ADDED : ஜூன் 28, 2024 12:17 AM
கம்பம் : வனப்பகுதிகளிலிருந்து 5 கி.மீ. தூரம் கடந்து வந்து வேளாண் பயிர்களை சேதம் செய்யும் காட்டு பன்றிகளை கொல்ல வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
வனப்பகுதிகளை ஒட்டியுள்ள நிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களை வன விலங்குகள் சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அவற்றிற்கு தேவையான உணவு பொருள்களை சாகுபடி செய்வதால் சேதப்படுத்துகிறது. தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப்பில் துவங்கி பெரும் பகுதி வனப்பகுதியை ஒட்டி தோட்டங்கள் உள்ளன. இங்கு திராட்சை, மொச்சை, கிழங்கு வகைகள், தென்னை, கொட்டை முந்திரி, தக்காளி உள்ளிட்ட பயிர்கள் வன விலங்குகளால் சேதப்படுத்தப்படுகிறது. யானைகள், காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
காட்டு பன்றிகளை கேரளாவில் கொல்ல அம்மாநில வனத்துறை கடந்தாண்டு அனுமதி வழங்கியது. அதை சுட்டிக்காட்டி தமிழகத்திலும் விவசாயிகள் வலியுறுத்தினர். இதற்கென வேளாண் , வனம், ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறைகள், விவசாயிகள், தன்னார்வலர்கள் அடங்கிய கமிட்டி அமைத்து அறிக்கை கோரப்பட்டது. அந்த கமிட்டியின் பரிந்துரையை ஏற்று, தமிழக வனத் துறை காட்டுப் பன்றிகளை கொல்ல சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது.
அதில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து ஒரு கி.மீ. தூரத்திற்குள் வந்ததால் காட்டு பன்றிகளை ஒன்றும் செய்ய கூடாது.
ஒன்று முதல் 5 கி.மீ. தூரத்திற்குள் என்றால், வனத்துறையே பன்றிகளை பிடித்து வேறு பகுதியில் கொண்டு போய் விட்டு விடும். 5 கி.மீ. தூரத்திற்கு அப்பால் வந்து பயிர்களை சேதப்படுத்துகிறது என்றால், வேட்டையாடி பன்றிகளை கொல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாவட்ட வன அலுவலரின் முன் அனுமதி பெற வேண்டும். சம்பந்தப்பட்ட கிராமத்தில் உள்ள வார்டு உறுப்பினர், வி.ஏ.ஒ., வனக்காவலர் அடங்கிய கமிட்டி பரிந்துரைக்க வேண்டும். அந்த பரிந்துரையின் பேரில் மாவட்ட வன அலுவலர் அனுமதி வழங்குவார். மேகமலை புலிகள் காப்பக உதவி இயக்குனர் ஆனந்த் கூறுகையில் இதுவரை அலுவலக ரீதியாக அரசிடமிருந்து இது தொடர்பாக எந்த உத்தரவும் எங்களுக்கு வரவில்லை. கேரளாவில் ஒரு சில மாவட்டங்களில் இது போன்ற நடைமுறை உள்ளது. அரசு உத்தரவு கிடைக்கப் பெற்ற பின் அது தொடர்பாக விண்ணப்பங்கள் வந்தால், அரசின் வழிகாட்டுதல் படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். என்றார்.