/உள்ளூர் செய்திகள்/தேனி/ பஸ்சில் பெண்ணிடம் 4 பவுன் செயின் திருட்டு பஸ்சில் பெண்ணிடம் 4 பவுன் செயின் திருட்டு
பஸ்சில் பெண்ணிடம் 4 பவுன் செயின் திருட்டு
பஸ்சில் பெண்ணிடம் 4 பவுன் செயின் திருட்டு
பஸ்சில் பெண்ணிடம் 4 பவுன் செயின் திருட்டு
ADDED : ஜூலை 21, 2024 08:02 AM
ஆண்டிபட்டி: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை செங்கட்டாம்பட்டியை சேர்ந்தவர் ஸ்கைலாப் 45, கணவர் இறந்தபின் அப்பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது மகள் யுவராணியை ஆண்டிபட்டி முத்தனம்பட்டியை சேர்ந்த பொம்முராஜ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
முத்தனம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக வத்தலகுண்டில் இருந்து ஆண்டிபட்டிக்கு அரசு டவுன் பஸ்சில் சென்று, பின்னர் ஆண்டிபட்டியில் இருந்து தேனி செல்லும் டவுன் பஸ்சில் ஏறி முத்தனம்பட்டியில் இறங்கிய போது கழுத்தில் இருந்த 4 பவுன் செயின் காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து ஸ்கைலாப் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.