/உள்ளூர் செய்திகள்/தேனி/ கம்பத்தில் ரூ.2.89 கோடியில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கம்பத்தில் ரூ.2.89 கோடியில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட்
கம்பத்தில் ரூ.2.89 கோடியில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட்
கம்பத்தில் ரூ.2.89 கோடியில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட்
கம்பத்தில் ரூ.2.89 கோடியில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட்
ADDED : ஜூன் 25, 2024 12:11 AM
கம்பம் : கம்பத்தில் ரூ. 2.89 கோடியில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக நகராட்சி தலைவர் வனிதா தெரிவித்துள்ளார்.
நகராட்சி தலைவர் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் தாலுகாவிற்கு ரயில் சேவை வசதி கிடையாது. எனவே சென்னை, பெங்களூரு, கோவை போன்ற நகரங்களுக்கு கம்பத்தில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறது.
தினமும் இரவு குறைந்தது ஆம்னி பஸ்களுக்கென பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், மெயின்ரோட்டில் நிறுத்தி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.அதை தவிர்க்க நகராட்சி சார்பில் அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று தற்போது கம்பத்தில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அமைக்க ரூ.2 கோடியே 89 லட்சத்தை அரசு அனுமதித்துள்ளது. - வாரச்சந்தை அருகில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும்.
அதே போல புதிய பஸ் ஸ்டாண்டில் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ள ரூ. ஒரு கோடியே 78 லட்சமும், கமிஷனர் குடியிருப்பை இடிந்து விட்டு வணிக வளாகம் கட்ட ரூ.ஒரு கோடியே 78 லட்சமும், யாழினி நகரில் பூங்கா அமைக்க ரூ.29 லட்சம் அரசு அனுமதித்துள்ளது.
இதற்கான பணிகளில் பொறியியல் பிரிவு முழு வீச்சில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.