/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஓட்டல்களில் கெட்டுப்போன 100 பரோட்டாக்கள் பறிமுதல் ஓட்டல்களில் கெட்டுப்போன 100 பரோட்டாக்கள் பறிமுதல்
ஓட்டல்களில் கெட்டுப்போன 100 பரோட்டாக்கள் பறிமுதல்
ஓட்டல்களில் கெட்டுப்போன 100 பரோட்டாக்கள் பறிமுதல்
ஓட்டல்களில் கெட்டுப்போன 100 பரோட்டாக்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 21, 2024 08:03 AM
தேனி: தேனியில் உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் நடத்திய சோதனையில் இரு ஓட்டல்களில் இருந்து 7.5 கிலோ எடையுள்ள 100 பரோட்டாக்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
மாவட்டத்தில் ஆடுவதை கூடங்களில் முத்திரையிடாமல் ரோட்டோரம் சுகாதாரமின்றி இறைச்சி விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்தவும், ஓட்டல்களில் சோதனை நடத்த கலெக்டர் ஷஜீவனா அறிவுறுத்தினார்.
உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டியராஜன், சுரேஷ்கண்ணன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுல்தான் ஆகியோர் இணைந்து சமதர்மபுரம், பாரஸ்ட்ரோடு, பங்களாமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி விற்பனை கடைகளில் சோதனை செய்தனர்.
இதில் சுகாதாரம் பின்பற்றாத உரிய முத்திரை இன்றி இறைச்சி வியாபாரம் செய்த 5 கடைகளுக்கு தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மூன்று ஓட்டல்களில் ஆய்வில் இரு ஒட்டல்களில் 7.5 கிலோ எடையுள்ள 100 பரோட்டாக்கள் பறிமுதல் செய்து தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்தனர்.