Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ வாடகை செலுத்தாத தேனி நகராட்சி கடைகளுக்கு 'சீல்'

வாடகை செலுத்தாத தேனி நகராட்சி கடைகளுக்கு 'சீல்'

வாடகை செலுத்தாத தேனி நகராட்சி கடைகளுக்கு 'சீல்'

வாடகை செலுத்தாத தேனி நகராட்சி கடைகளுக்கு 'சீல்'

ADDED : மார் 12, 2025 06:48 AM


Google News
தேனி; தேனியில் நகராட்சி கடைகளில் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைத்து, மறு ஏலம் விட முடிவு செய்துள்ளதாக கமிஷனர் ஏகராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது: தேனி நகராட்சிக்குட்பட்டு 546 கடைகள் உள்ளன. இவை பொது ஏலம் மூலம் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. இந்த கடைகளை ஏலம் எடுத்த சிலர் சரிவர வாடகை பணம் செலுத்த வில்லை. நடப்பு நிதியாண்டு வரை 115 கடைகள் வாடகை பாக்கி, குத்தகை பாக்கி என ரூ. 408 லட்சம்நிலுவை இருந்தது. இதில் இதுவரை ரூ.166.69 லட்சம் வாடகை, குத்தகை நிலுவையாக உள்ளது. வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. சீல் வைக்கப்பட்ட கடைகளை மீண்டும் பொது ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us