ADDED : ஜூன் 16, 2024 05:28 AM
சின்னமனூர்: சீலையம்பட்டியில் செல்லாயி அம்மன் கோயிலில் கருப்பசாமி, விநாயகர் சிலைகள் திருடு போனதாக பூஜாரி புகாரில் சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
சீலையம்பட்டி நெடுஞ்சாலையில் செல்லாயி அம்மன் கோயில் உள்ளது. இங்கு பொன்னையா 55 என்பவர் பூஜாரியாக உள்ளார்.
இந்த கோயிலிற்கு இதே ஊரை சேர்ந்த கார்த்திக் என்பவர் 4 அடி உயரமுள்ள கல்லால் ஆன கருப்பசாமி சிலை மற்றும் 2 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
அந்த இரண்டு சிலைகளையும் கோயிலிற்கு வெளியில் வைத்து பூஜை செய்து வந்துள்ளனர்.
வழக்கம் போல நேற்று முன்தினம் பூஜை செய்ய சென்ற போது கருப்பசாமி, விநாயகர் சிலைகளை காணவில்லை.
பூஜாரி புகாரில் சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருடு போன சிலைகளின் மதிப்பு ரூ 70 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.