/உள்ளூர் செய்திகள்/தேனி/ 5 எக்டேரில் டிராகன் பழ தோட்டம் அமைக்க இலக்கு 5 எக்டேரில் டிராகன் பழ தோட்டம் அமைக்க இலக்கு
5 எக்டேரில் டிராகன் பழ தோட்டம் அமைக்க இலக்கு
5 எக்டேரில் டிராகன் பழ தோட்டம் அமைக்க இலக்கு
5 எக்டேரில் டிராகன் பழ தோட்டம் அமைக்க இலக்கு
ADDED : ஜூலை 12, 2024 05:06 AM

தேனி: மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை திட்டத்தில் 40 சதவீத மானியத்தில் 5 எக்டேரில் டிராகன்பழ தோட்டம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிராகன் பழத்தோட்டம் அமைக்க ஒரு எக்டேருக்கு ரூ.2.40லட்சம் செலவாகிறது. இதில் 40 சதவீதம் அதாவது ரூ. 96ஆயிரம் மானியமாக தேசிய தோட்டக்கலை திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் தேனி, உத்தமபாளையம், சின்னமனுார், பெரியகுளம், கம்பம், ஆண்டிப்பட்டி வட்டாரங்களில் தலா 0.5 எக்டேர், கடமலை, போடி வட்டாரங்களில் ஒரு எக்டேர் சாகுபடிக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை அணுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.