ADDED : ஜூன் 01, 2024 05:25 AM
சின்னமனூர்: சின்னமனூர் வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை தாராளமாக நடக்கிறது.
உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சுரேஷ் கண்ணன், ஓடைப்பட்டி எஸ்.ஐ. பாண்டிச்செல்வி தலைமையிலான குழுவினர் சீப்பாலக்கோட்டை கிராமத்தில் செல்வ விநாயம் மற்றும் துரைராஜ் ஆகியோர் கடைகளில் சோதனை நடத்தினர். இரண்டு கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு கடைகளுக்கும் சீல் வைத்து, கடைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். அபராதத் தொகையை செலுத்திய கடைக்காரர்கள் , கடைகளை திறந்து வியாபாரத்தை துவக்கினர்.
சின்னமனூர் கிராமங்களில் உணவு பாதுகாப்பு துறை,ஓடைப்பட்டி போலீசார் குட்கா விற்பனையை தடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.