ADDED : ஜூன் 19, 2024 05:00 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே வீர சின்னம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 34, எம்.சுப்பலாபுரம் விலக்கு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன் நிறுவனத்தில் இருந்த சமையல் காஸ் அடுப்பு, 8 இரும்பு பைப்கள் திருடு போய்விட்டது.
இது குறித்து கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது திருடியவர்கள் விபரம் தெரியவந்தது.
அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித், வாய்க்கால்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் ஆகியோர் மீது முத்துக்குமார் கொடுத்த புகாரில் கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.