ADDED : ஜூலை 10, 2024 04:55 AM
தேனி : தேனி கலெக்டர் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் ஹிந்து எழுச்சி முன்னணி நகர செயலாளர் பிரேம் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
மனுவில், தப்புக்குண்டு அரசு குப்பை கிடங்கில் தேனி நகராட்சி, பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி பேரூராட்சிகளின் குப்பை கொட்டப்படுகிறது. அப்பகுதியில் அரசு சட்டகல்லுாரி, கால்நடை மருத்துவ கல்லுாரி, கலைக்கல்லுரிகள் உள்ளன. குப்பை கிடங்கில் இருந்து வரும் புகையால் மாணவர்களுக்கு நோய் ஏற்படும் நிலை உள்ளது. நிலத்தடி நீர் மாசடைகிறது. இதனை வேறு இடத்திற்கு மாற்ற கோரினர்.