/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் வழங்க அலைக்கழிப்பு பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் வழங்க அலைக்கழிப்பு
பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் வழங்க அலைக்கழிப்பு
பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் வழங்க அலைக்கழிப்பு
பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் வழங்க அலைக்கழிப்பு
ADDED : ஜூன் 14, 2024 05:36 AM
பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்டு பெரியகுளம் நகராட்சி, 17 ஊராட்சிகள், 5 பேரூராட்சிகள் உள்ளன. தற்போது பள்ளி, கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருவதால் தினமும் இருப்பிடம், ஜாதி, வருவாய், முதல் பட்டதாரி, ரேஷன் கார்டில் பெயர் சேர்ந்தல், நீக்கம், இதுதவிர பட்டா மாறுதல், கூட்டு பட்டா தனி பட்டாவாக மாறுதல் உட்பட பல்வேறு வகை சான்றிதழ்கள் கோரி இ சேவை மையங்கள் மூலமாகவும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்பங்கள் வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார் மூலம் சரிபார்க்கப்படுகிறது.
விண்ணப்பித்தோருக்கு சான்றிதழ்களுக்கு தகுந்தவாறு இருநாட்கள் முதல் அதிகபட்சம் 10 நாட்களில் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து அலுவலர்கள் ஆன்லைனில் கையெழுத்திட்டு சான்றிதழ் வழங்க வேண்டும்.
ஆனால் பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் எந்த சான்றிதழும் அவ்வளவு எளிதாக கிடைப்பது இல்லை. விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ் இணைக்கப்பட்டிருந்தாலும் தள்ளுபடி செய்வது, விண்ணப்பங்களை அதிக நாட்கள் கிடப்பில் போடுவது தொடர்கிறது.
இதனால் வி.ஏ.ஓ., ஆபீஸ், ஆர்.ஐ., ஆபீஸ், தாசில்தார் ஆபீஸ் என பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். மே 15 ல் இருப்பிடம், வருவாய், பட்டா மாறுதல் விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று வரை சான்றிதழ் வழங்கவில்லை. சான்றிதழ் கோரியவர்கள் 25 நாட்களாக அலைந்து கொண்டிருக்கின்றனர்.
தாலுகா அலுவலக வளாத்தில் செயல்படும் சேவை மையத்தில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய தற்காலிக பணியாளர்கள் இருவர் மட்டுமே பணியில் உள்ளதால் பொதுமக்களிடம் கடிந்து கொள்கின்றனர். இங்கு கூடுதல் பணியாளர்களை நியமிப்பதற்கு வருவாய் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் தாமதம் குறித்து விளக்கம் கேட்க தாசில்தார் அர்ஜூனனை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது 'சுவிட்ச் ஆப்' ஆகியிருந்தது.
தாமதம் இன்றி சான்றிதழ் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.