/உள்ளூர் செய்திகள்/தேனி/ சின்னமனுார் தெருக்களில் ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி சின்னமனுார் தெருக்களில் ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி
சின்னமனுார் தெருக்களில் ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி
சின்னமனுார் தெருக்களில் ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி
சின்னமனுார் தெருக்களில் ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி
ADDED : ஜூலை 13, 2024 04:22 AM
சின்னமனூர், : சின்னமனுார் நகராட்சி வீதிகளில் ஆக்கிரமிப்பு தாராளமாக இருப்பதால் பொதுமக்கள் நெருக்கடியில் தவித்து வருகின்றனர்.
சின்னமனுார் நகராட்சியில் 27 வார்டுகளை கொண்டுள்ளது. இங்கு 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது. நகர் வீதிகளில் குடியிருப்புகள் மிக நெருக்கமாக உள்ளது. முதல் வார்டு மேலப் பூலானந்தபுரம் தனித் தீவாக உள்ளது.
அந்த வார்டை தவிர்த்து மற்ற பகுதிகளான ஒன்றிய அலுவலக ரோடு, பொன்னகர் வீதி , வ.உ.சி. வீதிகள், கிழக்கு, வடக்கு, மேற்கு ரத வீதிகள், மார்க்கையன் கோட்டை ரோடு, மெயின்ரோட்டிற்கு மேற்கு பக்கம் உள்ள 5 க்கும் மேற்பட்ட குறுக்கு வீதிகள், கருங்கட்டான்குளம், அக்ரஹாரம் உள்ளிட்ட பல வீதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன. இங்கு ஒரு வீதி கூட நெருக்கடி இல்லாமல் இல்லை.
வீடுகளின் தலைவாசல் படியை இழுத்து வீதியை ஆக்கிரமித்து கட்டுவது, மேல்மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளை வீதியில் கட்டுவது, டூவீலர், கார் பார்க்கிங் அமைப்பது போன்ற செயல்கள் எல்லையின்றி உள்ளது. வாகன நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு வீதிகளில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. மெயின்ரோட்டில் கடைக்காரர்கள், தங்களின் பொருள்களை நடு ரோட்டில் காட்சிப்படுத்தி வருகின்றனர்.
நகராட்சியின் நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் ஆக்கிரமிப்பு அகற்ற தொடர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வாகும்.
குறிப்பாக ரத வீதிகள் மற்றும் மெயின் ரோட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்திஉள்ளனர்.